அரசியலா.? முக்கிய நபருடன் கைக்கோர்க்கப் போகும் சிம்பு.? இனி பரபரப்புக்கு பஞ்சமில்ல.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகிய இந்த திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் என்று கூறினால் அது மிகையாகாது.

அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பின்னர் ஒருநாள் குமார் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த படங்களை முடித்த பின்னர் சிம்பு யாருடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஏ ஆர் முருகதாஸ் அதன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு காலத்தில் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் என்றாலும் சமீபகாலமாக அவரது மார்க்கெட் கவிழ்ந்துவிட்டது. இந்த நிலையில் சிம்புவுக்கு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு கதை கூறி இருப்பதாகவும் அந்த கதை என்று கண்டுபிடித்து விட்டதால் அவர் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பொதுவாக ஏ ஆர் முருகதாஸ் நாட்டு மக்களின் பிரச்சனைகளை எந்தவிதமான பயமும் இல்லாமல் வெளிப்படையாக தனது படங்களில் பேசக்கூடியவர். அந்த வகையில் அடுத்ததாக சிம்புவின் திரைப்படத்திலும் மக்களை ஏமாற்றி எப்படி அரசியல் செய்கிறார்கள் என்ற கான்செப்டை கொண்டு படமெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simbu may next Movie with AR murugadoss


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->