சிம்புவின் முக்கிய படம் டிராப் செய்யப்பட்டதா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் கிளைம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் தற்போது டிராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu korona kumar movie may dropped 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->