தனது திருமணம் குறித்து வெறுப்புடன் பேசிய சுருதிகாசன்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பாடகி, நடனம் என்று பல்வேறு திறமைகளை காட்டி அசதி வருகின்றார். ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர்.இதுமட்டுமின்றி அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாட நிகழ்த்துவார். அதுபோல சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், "உங்கள் காதலருடன் லிவிங் டூ கெதரில் வாழும் நீங்கள் எதற்கு அவரை திருமணம் செய்யவில்லை?" என்று ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு ஸ்ருதிஹாசன், "எனக்கு திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது. அதனால்தான் அதை பற்றி நான் யோசிக்கவில்லை. என் அம்மா சரிகாவின் திருமண வாழ்க்கை தோல்வியடைந்ததால் நான் அப்படி யோசிக்கவில்லை. திருமணம் என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது பற்றிய பயம் மட்டும்தான் இருக்கிறது. இதனால் தான் திருமண பந்தத்தைப் பற்றி நான் அதிகம் யோசிக்கிறேன். 

என் வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிகா வந்த பின் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுக்குள் பல விஷயங்கள் பொருந்தியிருக்கிறது. இப்போது நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் போல உணருகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shruthi Hassan answer her fan question


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->