'மஹா ராஜமவுலி' ஆர்.ஆர்.ஆர். படத்தை பார்த்துவிட்டு சங்கர் புகழாரம்.! - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம்தான். ஆர்.ஆர்.ஆர் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது. 

pan-india திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கிலேயே வெளியாகியது. 

இது கன்னட ரசிகர்களிடம் கண்டனத்தை பெற்றது. பாகுபலி படம் தமிழகத்தில் 400 திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த, இயக்குனர் ஷங்கர், "RRR இந்த கர்ஜனை காலம் முழுதும் எதிரொலிக்க போகிறது. ஈடு இணையற்ற அனுபவத்தை கொடுத்த RRR படக்குழுவுக்கு நன்றி. 'மஹா ராஜமவுலி'யின் கற்பனைக்கு தலைவணங்குகிறேன்."என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shankar wishes to Rajamouli 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->