கரண்டு போன நேரம்., மனுஷன் கையை பிடித்து...!! அறந்தாங்கி நிஷாவின் சுவாரசிய காதல்.!! மனம் திறந்து பேட்டி.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி., பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது திருமணம் காதல் திருமணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில்., இவரின் காதல் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். 

பள்ளிப்பருவ காலத்தில் இருந்தே தனது அத்தை மகனை காதலிக்க நிஷா துவங்கியுள்ளார். சுமார் 5 வருடங்கள் தீவிர காதலுக்கு அடுத்தபடியாக தனது அத்தை மகனை பெற்றோர்களின் ஆசைக்கிணங்கி கரம்பிடித்துள்ளார். 

இவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் இல்லத்திருமண விழாவிற்கு சென்ற சமயத்தில்., அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில்., திடீரென மின் தடை ஏற்பட்ட சமயத்தில்., கையை பிடித்த காதலன்., உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் காதலன் ரியாஸ் வெளிநாட்டிற்கு சென்று விடவே., இருவரும் அலைபேசியின் மூலமாக பேசி கொண்டு காதலை வளர்த்து வந்தோம். அந்த சமயத்தில்., ஒரு நாள் கடிதத்தில் அவருக்கு ஐ லவ் யூ என்று இரத்தத்தால் எழுதி அனுப்பியிருந்தேன். 

அந்த கடிதத்தை கண்ட ரியாஸ் எந்த கலர் ஸ்கெட்ச்சில் எழுதினாய் என்று கிண்டல் அடித்தார். இதற்கு நான் அட போய்யா.. உனக்காக எனது இரத்தத்தை வீணாக்கி விட்டேனே என்று தெரிவித்தேன். இவ்வாறு இரத்தம் சிந்தி எங்களின் காதலை வளர்த்து வந்தோம். 

ரியாஸின் குடும்பமானது ஏழ்மையான குடும்பம் என்ற காரணத்தால் எனது குடும்பத்தார்கள் திருமணம் செய்து வைக்க தயங்கினாலும்., உறவினர்களின் முயற்சியால் எங்களின் திருமணம் நடைபெற்றது. ரியாஸ் எனக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளார். திறமையை வெளிக்காட்ட அவரின் குணமும் எனக்கு உதவியாக அமைந்தது.  

இது குறித்து ரியாஸ் தெரிவித்தாவது., திருமணமான சமயத்தில் வெளிநாட்டில் இருந்த வேலை திடீரென நின்று போனது., என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த சூழலில் பட்டிமன்றத்திற்கு சென்று சம்பாரிக்க துவங்கினார். 

இரண்டு வருடத்தில் பல கஷ்டம் வந்து சென்ற பின்னர்., அரசு பணி கிடைத்தது. இந்த இரண்டு வருடத்திற்குள் பல துன்பங்கள் வந்து சென்றது. நிஷா போன்ற மனைவி எனக்கு கிடைத்தது., எனது அதிஷ்டம் என்று கலங்கி கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actress aranthangi nisha speech about her love life


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->