முதன்முதலாக தங்களது அழகிய இரட்டைக்குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி ப்ரஜின்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகர் ப்ரஜின். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இது ஒரு காதல் கதை', காதலிக்க நேரமில்லை', ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் ப்ரஜின்  தற்போது சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு இந்த சீரியலின் மூலம் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ப்ரஜின் சீரியல்களில் மட்டுமின்றி ,திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர்  டிஷ்யூம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சாண்ட்ரா கண்ணுக்குள் நிலவு, போராளி, 6 மெழுகுவத்திகள், காற்றின் மொழி உட்பட பல  தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் பிரபலமான பல சீரியல்களில் நடித்துள்ளார்.]

இந்நிலையில் ப்ரஜின் மற்றும் சாண்ட்ராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கிடையே  சாண்ட்ரா கர்ப்பமாக உள்ளார் என காதலர் தினத்தை முன்னிட்டு ப்ரஜின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.இந்நிலையில் தற்போது  இருகுழந்தைகளின் காலிலும் சாண்ட்ரா மற்றும் ப்ரஜன் என பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை போட்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ப்ரஜின் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி , ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhra prajin post twin baby photo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->