சந்தானத்தின் திரைப்படம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது..படக்குழு அறிவிப்பு.!
santhanam film release date changed
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’.இந்த படம் ஜனவரி 31ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதே தேதியில் சந்தானம் நடிப்பில் உருவான இன்னொரு படமான ‘சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி அமைத்துள்ளது. சர்வர் சுந்தரம் திரைப்படம் பிப்ரவரி 14 தேதி வெளியாகும் எனபடக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். ராதா ரவி, மயில்சாமி, பூனம் ஷா, பிஜேஷ், கிட்டி, சண்முகராஜன், சுவாமிநாதன், செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன் ,பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
English Summary
santhanam film release date changed