விஜய்சேதுபதியை தட்டி தூக்கிய சந்தானம்! ஒரு வருஷத்துல இத்தனை படமா?!! - Seithipunal
Seithipunal


சிம்பு நடித்து வெளியான மன்மதன் திரைப்படம் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இவர் முன்னணி கதாநாயகிகளுடன் எக்கச்சக்கமான படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக இருந்தபோது கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தானம், அவரது முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தது. அவர் நடித்த அனைத்து படங்களுமே வியாபார ரீதியில் நல்ல வசூலை பெற்று தந்தது.

Image result for santhanam seithipunal

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயர் விஜய்சேதுபதிக்கு இருந்தது. ஆனால் அதனை முறியடிக்கும் வகையில் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானத்தின் படமே இவ்வருடம் திரைக்கு வர இருக்கும் படங்களின் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது.

இதில் இந்த வருடத்தின் தொடக்கமே 'டகால்டி' படம் வெளிவந்தது. தற்போது சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்குதுட்டு3 ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ஆறு படங்களும் இந்த வருடமே திரைக்கு வர உள்ளது.

மேலும், கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் சந்தானம். A1  படத்தை எடுத்த ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷ்.வி இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். உலகம் படத்தை தயாரித்த பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் தொடர்ந்து நடிக்க இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam act more movies than the vijaysethupathi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->