நம்ம சந்தானமா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு தொடக்கத்தில் "கவுன்டிங் ஸ்டார்" சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்கள் கம்மிட் ஆகியது. 

பூமராங் பட இயக்குனர், ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு புதிய படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றது. 

நடிகர் சந்தானம், ஸ்டண்ட் சிவாவிடம் சிலம்பம் கற்றுவருகிறார். இதுகுறித்து இயக்குனர், கண்ணன், " இந்த படம் கிராமப்புற பின்னணியில் ஆக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாக காத்திருக்கிறது. எனவே, சந்தானம் ஸ்டண்ட் சிவாவிடம்  கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி பெற்றுவருகின்றார்." என தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

santhanam, seithipunal

இதன் படப்பிடிப்பு, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் என தெரிகிறது. இதனை தவிர இயக்குனர், ஜான்சன் இயக்கத்தில் ஏ1 படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி படத்திலும் அவர் நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது பரப்பப்பட்டு, வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்தால் அது உண்மையில் சந்தானம் தானா என்ற சந்தேகம் தான் எழும். ஆனால், உண்மையில் இது சந்தானத்தின் மிகவும் பழைய புகைப்படம் என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 

நடிகர் சந்தானத்தின் பழைய புகைப்படம்: 

santhanam old photo, seithipunal

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santham old photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->