கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை கிண்டல் செய்த நெட்டிசன்கள்! பக்காவான கேள்வியால் பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சூர்யாவுக்கு நடித்து பிரபலமானவர்  நடிகை சமீரா ரெட்டி.அதனை தொடர்ந்து சமீரா ரெட்டி அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்  கடந்த 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் வார்தேவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சமீரா ரெட்டி  கருவுற்றநிலையில் வயிறு பெரிதாக இருந்த புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவரது உடலமைப்பைக் கிண்டல் செய்து பதிவுகளும், மீம்ஸ்களும் வெளியிட்டு வந்தனர்.

இது சமீராவின் கவனத்திற்கு சென்ற நிலையில் இதுகுறித்து  நிகழ்ச்சி ஒன்றில் அவர்  பேசியுள்ளார்.அப்பொழுது “உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று உங்கள் அம்மாவிடம் கேளுங்க; கேளுங்கள்.

உடலமைப்பைப் பற்றி விமர்சிப்பது தவறானது, அவமதிப்பானது. என் உடலமைப்பு குறித்தும் நான்  கருவுற்றது குறித்தும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

English Summary

sameera answered netisans tease her body at pregnancy


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal