கண்ணீர் விட்ட ராதிகா சரத்குமார்!. காரணம் இதுதான்!. - Seithipunal
Seithipunalபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களுள் ஒன்று வாணி ராணி. இதனை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரித்துள்ளது. 

மேலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் ராதிகா வாணி மற்றும் ராணி என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் இதில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    

இந்த தொடர் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் அதன் கடைசி படப்பிடிப்பு இன்று நடைபெறுகிறது.  இதனை ராதிகா சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில், மகிழ்ச்சி மற்றும் கவலை கலந்த உணர்வாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் உணர்வுமிக்க எங்களது வாணி ராணி தொடர், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதுதான் எங்களது கடைசி படப்பிடிப்பு. எங்களது இந்த நீண்ட நாள் பயணத்தில் நிறைய அனுபவங்கள், மகிழ்ச்சி, கவலை, சோர்வு நிறைந்துள்ளது.  

மேலும் ராடான்காக களைப்பின்றி உழைத்த அனைவரையும் நினைக்கும்போது பெருமையாக உள்ளது. எங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளித்த சன் டிவிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

English Summary

Rathika sarathkumar crying for her serial


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal