சம்மதம்.. சமாதானம்.. கற்றுக்கொள்.... ரஷ்மிகா மந்தனாவின் சூட்சமம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான டியர் காம்பேட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்த படத்திற்கு பின்னர் இவர் பெரியளவில் பிரபலமாகியுள்ளார். 

மேலும்., இவர் தற்போது சுல்தான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில்., தெலுங்கு மொழியில் இரண்டு திரைப்படமும்., கன்னட மொழியில் ஒரு திரைப்படமும் தன் கைவசத்தில் வைத்துள்ளார். 

rashmika mandanna ,

இவர் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் தெரிவித்தாவது., வெற்றி என்பது எந்த சமயத்திலும் உற்சாகத்தை வழங்கும். ஆனாலும் வெற்றியடைந்த திரைப்படம் ஒரு பார்வையிலும்., தோல்வியுற்ற திரைப்படம் ஒரு பார்வையிலும் பார்க்க இயலாது. 

என்னை பொறுத்த வரையில் இரண்டும் சம்மதம் மற்றும் சமமானது தான். இருப்பினும் படம் வெற்றியடைந்தால் இன்னும் சில படவாய்ப்புகள் தேடி வரும்., பணம் சம்பாதிக்கலாம் என்று பெரும்பாலானோர் நினைப்பார்கள்.. 

rashmika mandanna,

எனக்கு பணம் மற்றும் மற்றொரு படவாய்ப்பு என்பது முக்கியம் கிடையாது. ஒரு படத்துக்காக நாம் எவ்வுளவு உழைத்துள்ளோம்., எவ்வுளவு கற்றுக்கொண்டுள்ளோம் என்பதே முக்கியமான ஒன்றாகும். நமது உழைப்பிற்கு பலன் கிடைக்கவில்லை என்றால்., உழைப்பு வீணாகிவிட்டதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். 

இதனை சரி செய்ய கற்றுக்கொண்ட விஷயத்தை நினைவுபடுத்தி நமது மனதை ஒருங்கிணைக்க வேண்டும். திரைத்துறையை பொறுத்த வரையில் சம்பளத்தில் நடிகர் - நடிகைகளுக்கு வித்தியாசம் இருக்கலாம். பலன்களை பொறுத்த வரையில் கதாநாயகர்களும் - கதாநாயகிகளுக்கும் ஒரே பலன்தான். சில சமயம் பாதிப்புகள் கூட இருக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika mandanna speech our her carrier and learning


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->