பிரபல சின்னத்திரை நடிகைக்கு, பரமக்குடியில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.!
Ramanathapuram Paramakudi Hospital Famous Serial Actress Revathi Second Delivery Male Child
பிரபல நடிகைக்கு அழகிய ஆண் குழந்தை பரமக்குடி மருத்துவமனையில் பிறந்தது.
தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற தொடர்கள் மற்றும் நடிகர் சசிகுமார் - லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் ஆகியவற்றில் நடித்திருந்த நடிகை ரேவதி.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை சார்ந்த தாமோதரன் திருமணம் செய்தார். இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
மாதிரி படம் : குழந்தை
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, குடும்பத்தினர் ரேவதியை அங்குள்ள பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதியான ரேவதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் நடிகை ரேவதி - தாமோதரன் தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram Paramakudi Hospital Famous Serial Actress Revathi Second Delivery Male Child