பின்வாங்குவேன் என நினைத்தீர்களா?! விளக்கத்துடன் வந்து நன்றி சொன்ன ரஜினி!  - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் நடைபெற்ற காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலான மக்கள்  ஊரடங்கு குறித்து, ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட காணொளி, தவறான கருத்துகளுடன் இருப்பதாக கூறி ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது. இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். புரிந்துகொண்ட விதம் வேறு மாதிரி ஆகிவிட்டது எனவும், மேலும் அந்த காணொளியை பரப்பியவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்

"நேற்று பதிவு செய்த காணொளியில் 12 - 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைப்பட்டு, சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று நான் கூறியிருந்ததால் அது, "இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்" என்று பரவலாக புரிந்துகொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் டுவிட்டரில் நிர்வாகம் அதை நீக்கி உள்ளது. 

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைய போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸை நிறுத்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம்.  

இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தை புரிந்துகொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி" என ரஜினிகாந்த் தற்போது டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth twit about corona virus twitter deleted video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->