உருவாகிறது தில்லுமுல்லு 2 திரைப்படம்.! ரஜினியின் நகைச்சுவை ஆசையை நிறைவேற்றப்போகும் இயக்குனர்.!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க., கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும்., திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை சந்தோஷ் சிவன் மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் முதற்பார்வை வெளியாகி., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ள நிலையில்., இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மும்பையில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தர்பார் படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டதற்கான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மும்பைக்கு செல்வதற்கு முன்னதாக ரஜினிகாந்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து பேசினார். 

இந்த சூழ்நிலையில்., மும்பையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்., ரஜினிகாந்தை நயன்தாராவின் காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இவர்கள் இருவரும் நகைச்சுவை திரைப்படத்தில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 1981 ம் வருடத்தில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தில்லு முல்லு. இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி இருந்தது. இதனைப்போன்று நகைச்சுவை திரைப்படமாக தில்லுமுல்லு திரைப்படத்தின் இரண்டு பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth thillumullu 2 movie join with director vignesh shivan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->