நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லம் உள்ளது. இங்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் பெரும் பீதியை கிளப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருக்கும் காவல் துறையினரை உஷார் படுத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வந்தனர். 

இதில் வெடிகுண்டு போன்ற பொருட்கள் ஏதும் இல்லாத சூழலில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth house bomb tread by Stranger police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->