சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! இயக்குனர் யாரு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தொடங்கிய தர்பார் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது, இந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 4-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது.எந்திரன், பேட்ட, படங்களுக்கு பிறகு ரஜினி படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் 168-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth 168th film in sunpictures production


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->