சாதித்து விட்டீர்கள்..பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற மோடி!! வாழ்த்து கூறி பிரபல முன்னணி நடிகர் வெளியிட்ட பதிவு!! - Seithipunal
Seithipunal



கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெற்றது.

இந்நிலையில் இன்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் இந்திய அளவில் 342 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 93 இடங்களிலும், பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.  இந்நிலையில் பெரும்பான்மையான வெற்றியுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு, கூட்டணி கட்சிகள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், மதிப்பிற்குரிய நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini wish to modi for success


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->