விவேக்கின் உடல்நலம்பெற பிரார்த்தனை.! ரஜினி ட்வீட்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று பிரபல நகைச்சுவை நடிகரான விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றார். 

இத்தகைய சூழலில் இன்று காலை நடிகர் விவேக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விவேக்கின் ரசிகர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பல்வேறு பிரபலங்களும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகைய சூழலில் நடிகர் ரஜினிகாந்த் விவேக்கின் உடல்நலம் மீண்டெழ பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு ட்வீட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini Tweet about vivek


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->