"தர்பார்" குறித்த கேள்விக்கு., ரஜினியின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில்., திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தர்பார்". இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்., நயன்தாரா., நிவேதா தாமஸ்., யோகிபாபு மற்றும் ஸ்ரீமன் போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த திரைப்படமாக இருக்கும் என்று அனைத்து தரப்பிலிருந்து தகவல் வெளியான நிலையில்., இந்த திரைப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

darbar movie, darbar movie latest images,

இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக ரஜினி நடித்து வருவது வெளியான போஸ்டரில் இருந்து தெரியவந்த நிலையில்., இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில்., விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்தடுத்து இணையதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பானது பெரும்பாலானவை முடிந்துவிட்ட நிலையில்., தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்க்காக ரஜினி கடந்த மாதம் 18 ஆம் தேதியன்று மும்பைக்கு புறப்பட்டு சென்ற நிலையில்., தற்போது மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. 

rajini, petta, petta movie, rajini latest images,

இந்த நிலையில்., படப்பிடிப்பை நிறைவு செய்து நேற்றிரவு சென்னை விமான நிலையத்திற்கு ரஜினி வந்தார். இவரை வரவேற்க ரசிகர்கள் கூடியிருந்த நிலையில்., பத்திரிக்கையாளர்கள் தர்பார் திரைப்படம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

இதற்கு பதிலளித்த ரஜினி "தர்பார் திரைப்படம் அருமையாக வந்துள்ளது., படப்பிடிப்பும் நன்றாக சென்றது., படம் சிறப்பாக வந்துள்ளது" என்று தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த துவங்கினர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini says movie good to come darbar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->