அன்று அலெக்ஸ் பாண்டியன் இன்று தர்பார்.!! வெளியனாது ரஜினியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தை சன்குழுமம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் இருந்த அனைத்து பாடல்களும்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்., இந்த படத்தில் இருந்த பேட்ட வேலன் கதாபாத்திரத்தின் தீம் இசையானது பெரும் வைரலாகியது. 

இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில்., இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. 

இந்த படத்திற்கான 45 நாட்கள் கால்சீட்டை நடிகர் ரஜினிகாந்த வழங்கியுள்ள நிலையில்., இந்த படத்திற்கான போட்டோ சூட்கள் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் ரஜினி கதாபாத்திரத்திற்கான புகைப்படம் இன்று காலை வெளியாகி ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுளளது. 


அந்த புகைப்படத்தில் ரஜினியை சுற்றிலும் காவல் துறையினருக்கு பயன்படும் வகையில் உள்ள பொருட்கள் உள்ளன. இதனால் ரஜினி காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும்., இந்த படத்தின் மூலமாக நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ரஜினி காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்பதால் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்கு பயங்கர ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini next movie poster tarpar first look


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->