ரஜினிகாந்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!  - Seithipunal
Seithipunal


தலைவர் 168 என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றானது உருவாகி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பெயரை இன்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.  

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு என ஒரு மிகப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. 

அதேபோல நகைச்சுவை நடிகர்களான சூரி, சதீஷ், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வரும் இந்தப் படத்தின் பெயர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பெயர் "அண்ணாத்த" என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini next movie name announced by sun pictures


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->