ரஜினியால் பாதிக்கப்பட்ட குமரி ரசிகர்.! வழக்குப் பதிவில் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சமீபத்தில் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவரது ரஜினி குறித்த விமர்சனம் கவனம் பெற்று வருகிறது. 

ரஜினி ரசிகர் மன்றத்தின் கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளராக ஆர் எஸ் ராஜன் சிறுபான்மை அணி இணை செயலாளர் சதீஷ் பாபு மற்றும் மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி ஆகிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். மக்கள் மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட துணை செயலாளர் ஆர் எஸ் ராஜன், "1986 ஆம் வருடத்திலிருந்து ரஜினி ரசிகர் மன்றத்தில் இருக்கிறேன். 2017ஆம் ஆண்டில் இருந்து கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்து வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்த நான், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். 

ரஜினி என்னை மட்டும் ஏமாற்றவில்லை. அவருடைய ஒட்டுமொத்த ரசிகர்களையும் பொது மக்களையும் ஏமாற்றி வருகிறார். எந்திரன் திரைப்படத்தை 800 கோடி ரூபாய்க்கு விற்க அவர் காட்டிய தந்திரம்தான் அரசியல் கட்சி துவக்கம். உயிரே போனாலும்மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வருவேன். என்று கூறியவர் பொய்யாக போய் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். என்னை நீக்கியதால் நான் சும்மா இருக்கப் போவதில்லை. இது என் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது. 17.50 லட்சம் செலவு செய்து இருக்கிறேன். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini fan may affected by rajini announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->