காஞ்சனா 3 வெற்றியை தொடர்ந்து, கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ்! கொண்டாடும் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் சினிமாவில் மட்டுமின்றி தனது நிஜ வாழ்க்கையிலும் மனிதநேயமிக்க ஒரு ஹீரோவாக உள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் ராகவா லாரன்ஸ் சமூகத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவளித்து இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் பல குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவைசிகிச்சை செய்ய உதவியுள்ளார்.

அதுமட்டுமின்றி லாரன்ஸ் சமூகத்தில் கஷ்டப்படும் அனைவருக்கும் தேடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் காஞ்சனா 3. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் வெற்றியை தொடர்ந்து லாரன்ஸ் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு பின்னரும் 15 நாட்கள் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்துள்ளார். மேலும் அவரை காண முடியாதவர்களை தானே நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும் அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் படிப்பிற்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் புதுக்கோட்டை மாவட்டம் கணேசன் என்பவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது ஆலங்குடி கணேசனின் இல்லம் தரைமட்டமானது. இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டித் தருவதாக உறுதியளித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் சமூக சேவகர் கணேசனுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

English Summary

ragava lawrance built new house for ganeshan


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal