கொரோனா நிதி 3 கோடி! இந்த கையில் வாங்கி அந்த கையால் கொடுத்த லாரன்ஸ்! வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு உட்பட பல பணிகளுக்காக நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மூன்று கோடியை அள்ளிக் கொடுத்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் இதுவரை அதிகபட்சமாக நடிகர் அஜித்குமார் 1.33 கோடியை கொடுத்திருந்த நிலையில், இவர் மூன்று கோடியை கொடுத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை தமிழ் சினிமா உலகில் அதிக பட்ச தொகையை வழங்கியவர் என்ற பெருமையை ராகவா லாரன்ஸ் பெறுகிறார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து பி வாசுவின் இயக்கத்தில் வெளியாகி சிவாஜி புரடக்ஷன் தயாரித்த சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகமானது தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆசியுடன் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தை இயக்கிய வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்த படத்திற்காக முன் தொகையாக வழங்கப்பட்ட ரூபாய் மூன்று கோடியினை அப்படியே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ராகவா லாரன்ஸ் ஒதுக்கியுள்ளார். அதன்படி அவர் பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு 50 லட்சமும், முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்கில் 50 லட்சமும், பெப்ஸி தொழிலாளர்கள் நலனுக்காக 50 லட்சம் ரூபாயும்,  நடனக்கலைஞர் சங்கத்தினருக்கு 50 லட்சம் ரூபாயும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 லட்சம் ரூபாயும் மற்றும் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான ராயபுரத்தில் இருக்கும் தினக் கூலிகள் மற்றும் ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் என மொத்தம் மூன்று கோடி ரூபாயையும் அவரை ஒதுக்கி உள்ளார். உணவுப் பொருள்கள் அனைத்தும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புடன் வழங்கப்படும் என ராகவா லாரன்ஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragava lawerence donate 3 crores for corona relief fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->