உணர்ச்சிகரமான தனது பிரசவ வீடியோவை வெளியிட்ட நடிகை ராதிகாவின் மகள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது மப்பேறூஜ்ம் பிரபல நடிகையாக  உள்ளவர் ராதிகா சரத்குமார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் சினிமாவில் மட்டுமின்றி பல சீரியல்களிலும் வெற்றிகரமாக நடித்துள்ளார். நடிகை ராதிகா தமிழ் மட்டுமின்றி அவ்வப்போது ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொணடார்.

நடிகை ராதிகாவின் மகள் ரயானே. இவர் கிரிக்கெட் வீரர் மிதுன் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து இந்த அழகிய தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த  குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.

இந்நிலையில், சமீபத்தில் அன்னையர் தினம் உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ரயானே தான் கர்ப்பமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களையும், பிரசவ அறையில் எடுக்கப்பட்ட வீடியோவையும் இணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில் ரயானே, தாரக், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக உனக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நீ எனக்கென ஒரு நோக்கம் மற்றும் அதற்கான திசையை காட்டினாய். நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனத் தெரிந்து கொண்ட நாளை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்.மேலும் அந்த சமயத்தில் நான் மிகவும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் இருந்தேன், 

 எல்லா அன்னையரிடமும் நான் சொல்வது உங்கள் குழந்தைகள் மீது அன்பாக இருங்கள். அவர்களை சரியாக வழி நடத்துங்கள் எனத் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English Summary

radhika daughter post pregnancy video


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal