தனது ஆஸ்தான நாயகியை கம்மிட் செய்த நெல்சன்.. கறாராக மறுத்த விஜய்.! பீஸ்ட் ஹீரோயின் முதலில் இவர் தானாம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், நடிகர் விஜய் படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும், அதற்கான போஸ்டர்கள் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

நெல்சன் தனது டாக்டர், டான் படங்களில் நடித்த பிரியங்காவை தான் முதலில் கம்மிட் செய்தாராம். ஆனால், விஜய் வேண்டவே வேண்டாம் என்று கறாராக மறுத்துள்ளார். அதன் பின் தான் அந்த வாய்ப்பை பூஜா ஹெக்டேவுக்கு சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka arulmohan missed beast movie


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->