பிரபாஸுக்கு விட்டு கொடுத்த சூர்யா., நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பிரபாஸ்!! - Seithipunal
Seithipunal


பாகுபலி படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'சாஹோ'.  இயக்குனர் சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ரேக்கர், ஜாக்கி ஷெராப், லால், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

இந்த படம்  ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென 'சாஹோ' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. அதன்படி இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. இதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' படமும் முதலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, பின்னர் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

இதனிடையே, 'சாஹோ' படம் ஆகஸ்ட் 30 ஆம் வெளியாவது உறுதியான நிலையில், அதே தேதியில் சூர்யாவின் 'காப்பான்' உள்பட ஒரு சில தென்னிந்திய மொழிப் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால் 'சாஹோ' படக்குழுவினர் சூர்யாவின் 'காப்பான்' படக்குழு உள்பட ஒருசில படக்  குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

'சாஹோ'  படக்குழுவினர்களின் வேண்டுகோளை ஏற்ற  'காப்பான்' படக்குழுவினர் உள்ளிட்ட ஒருசில படக் குழுவினர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக இருந்த தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதில் 'காப்பான்' செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. 

இதனனயடுத்து பிரபாஸ் மற்றும் 'சாஹோ' படத் படத்தயாரிப்பு  நிறுவனமும் நடிகர் சூர்யா மற்றும் காப்பான் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எங்களின் வேண்டுகோளை ஏற்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த அனைத்து படக் குழுவினருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prabhas thanks to actor surya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->