பக்கா.. பட்டையை கிளப்பும், பொன்னியின் செல்வனின் அடுத்த போஸ்டர்.!  இணையத்தில் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கிவரும் கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. 

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீதமுள்ள மொத்த காட்சிகளையும் படமாக்க உள்ளதாம் படக்குழு அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட்ரை பிரபல நாளிதழ் ஒன்று ஓவியமாக வரைந்துள்ளது. இந்த படத்தில் நடிக்கின்ற நடிகர்களின் தோற்றம் ஓவியமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponniyin selvan poster drawing 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->