ஒரேநாளில் சர்ச்சையில் சிக்கிய பொன்மகள் வந்தாள்.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்.!! - Seithipunal
Seithipunal


நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியான நிலையில், இப்படம் வெளியாகுவதற்கு முன்னதாக சில எதிர்ப்புகளை திரையரங்கு நிர்வாகிகள் தரப்பில் சந்தித்தது. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் செலவு செய்யப்பட்ட தொகையை விட நல்ல தொகைக்கே விற்பனை ஆனது. 

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ப்ரெட்ரிக் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம்பெற்று இருந்ததாக புகார் எழுந்தது. இந்த விஷயம் தொடர்பாக இயக்குனர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்த கடிதத்தில், AIDWA அமைப்பின் பெயர் படத்தில் உபயோகமாகியுள்ளது எங்களது கவனக்குறைவாகும். இதில் பிற உள்நோக்கம் என்பது இல்லை. மனதார இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். AIDWA அமைப்பின் படத்தையும் நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmagal Vandhal Director say sorry for AIDWA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->