நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பிரதமர் மோடி நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விவேக்கின் மரணம் எனக்கு சோகத்தை அளிக்கிறது. அறிவுபூர்வமான வசனங்கள் மூலமாக பலரையும் சிரிக்க வைத்தவர் விவேக் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சுற்றுசூழலுக்காக குரல் கொடுத்தவர் நடிகர் விவேக். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi mourning to actor vivek death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->