பேட்டைக்கு ஆப்பு.! அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேட்ட பட வெளியீட்டின் கொண்டாட்டமாக ரஜினி ரசிகர் மன்ற தென் சென்னை அமைப்பாளர் சினோரா அசோக் தலைமையில், சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கின் வெளிப்புறம் பிரமாண்டமான அமைக்கப்பட்ட மேடையில், தாம்பரத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவருக்கும் அவரது காதலி  காமாட்சிக்கும் இன்று இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. மேலும்  அவர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், பீரோ, வாஷிங் மெஷின், பாத்திரங்கள், சூட்கேஸ் உள்ளிட்ட ஏராளமான பொருட்களுடன் சீர்வரிசைகள் வழங்கப்பட்டு கொண்டாடினார்.

இந்நிலையில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம், இணையத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஜினியின் பேட்ட படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேட்ட திரைப்படம், இணையத்தில் வெளியாகி இருப்பது பட குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இணையத்தில் இதுவரை வெளியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta in tamil rockers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->