வசூலில் புதிய சாதனை படைத்த ஷாருக்கான்.. 5 நாட்களில் 543 கோடி வசூலை அள்ளிய ‘பதான்’ திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான். இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். 

இதற்கு, காவி உடை அணிந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் பதான் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரும் நிலையில், இந்திய அளவிலும் உலக அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் திரைப்படமானது 5 நாட்களில் மொத்தம் ரூ.543 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் ரூ.335 கோடியும், வெளிநாடுகளில் ரூ.208 கோடியும் வசூல் செய்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan movie collected 543 crores in 5 days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->