பரவை முனியம்மாவின் கடைசி ஆசை நிறைவேற்றப்படுமா? வைக்கப்பட்ட இறுதி கோரிக்கை!! - Seithipunal
Seithipunal


தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ரசிகர்களிடம் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. அந்த படத்தில் வரும் 'சிங்கம் போலெ' என்ற பாடலின் மூலம் மேலும் பிரபலமானார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பரவை முனியம்மா, தற்போது அவர் உடல்நிலை மோசமானதால் சமீபகாலமாக சினிமாவில் நடிக்கவில்லை. 

பரவை முனியம்மாவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமானது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இதன் காரணமாக, அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6 லட்சம் ரூபாய் நிதிஉதவி அளித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ருபாய் பணம் கிடைக்கிறது.

சமீபத்தில் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் தற்போது முதிர்வு காரணமாக நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை அவரது மனநலம் குன்றிய தனது மகனுக்கு வழங்க வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. இவரது இந்த கடைசி ஆசையை தமிழக அரசு நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paravai muniyama last wish


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->