ஓவியா நடித்த "A" படம்.! காரி துப்புய ரசிகர்கள்.!! பழத்தை ருசிக்கமா... ஓவியா அய்யோ, அம்மா, விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஓவியா. இவருக்கு இந்த படங்களுக்கு பின்  பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் புகழின் உச்சத்துக்கே சென்று விட்டார். அந்த நிகழ்ச்சியால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. 

இதனையெடுத்து, அவர் நடிக்கும் படங்களை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டபின் இதுவரை அவரின் எந்தப்படமும் வெளியாகவில்லை. அவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடிகை ஓவியா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது குறித்து நடிகை ஓவியா மனவேதனையுடன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ''எனது ரசிகர்கள், என்னை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள்'' என்று பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது வெளியான 90 எம்எல் திரைப்படத்தின் ஒரே ஒரு ட்ரைலரில் தனது மொத்த நல்ல பெயரையும் கெடுத்து கொண்டு உள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ள ஒரு மோசமான கலாச்சாரமான 'அடல்ட்' திரைப்படங்கள் அதிகம் வரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் ''திரிஷா இல்லனா நயன்தாரா'' அந்த திரைப்படத்திற்குப் பின் ''ஹரஹர மகாதேவகி'', ''இருட்டு அறையில் முரட்டு குத்து'' போன்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் அதிகப்படியான இரட்டை அர்த்தங்கள் என்றுகூடக் கூற முடியாத அளவிற்கு, நேரடி ஆபாச வசனங்கள் மூலம் திரைக்கதை ஆக்கப்பட்டு, அந்தப் திரைப்படங்கள் வெற்றியும் கண்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதுபோன்ற அடல்ட் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அப்படியாக வெளிவர உள்ள ஒரு திரைப்படம்தான் ''90 எம் எல்''. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் நடிகை ஓவியா சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, குடித்துவிட்டு ஆட்டம் ஆடுவது மற்றும் அந்த மாதிரியான விஷயங்களை வெளிப்படையாகவே தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது என்று காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலருக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி (ராணுவம்) என்று இருந்த ரசிகர்கள் கூட இன்று ஓவியாவை கழுவி கழுவி திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழ் திரைப்படங்கள் ஆபாசங்களுக்கு பஞ்சமில்லாமல் படத்தின் டைட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் பார்க்கக் கூடியது என்று வரக்கூடும். 

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய திரைப்படம் குறித்து நடிகை ஓவிய தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''ஒரு பழத்தை சுவைக்கும் முன், அதன் விதையின் தரத்தை தீர்மானிக்காதீர்கள். காத்திருங்கள் இந்த 'A' (ADULT) திரைப்படத்தை காண'' என்று புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளார்.


பொதுவாக சொல்லவேண்டுமானால், தமிழ் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் இதனை அனைத்தும் மறந்து ஆபாச சிந்தனையில் தள்ளப்பட்டு, வருங்கால சந்ததிகள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள், பள்ளி மாணவர்களின் மனநிலை கெட்டுப் போகக்கூடிய அபாயம் இது போன்ற திரைப்படங்களால் ஏற்பட்டுள்ளது. 
 

English Summary

OVIYA TWEET ABOUT 90ML MOVIE


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal