ஒரு அடார் லவ் படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்.!! உண்மையை கூறிய இயக்குனர்., நொந்துபோன பிரியா.!! - Seithipunal
Seithipunal


பள்ளிப்பருவத்தில் நடைபெறும் காதல் கதையம்சத்தை மையமாக வைத்து மலையாள திரையுலகில் வெளியான திரைப்படம் ஒரு அடார் லவ். இந்த படத்தில் பிரியங்கா வாரியார்., நூரின் ஷெரிப்., முகமது ரோஷன் மற்றும் பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

இந்த படத்தை இயக்குனர் ஒமர் இயக்கியிருந்த நிலையில்., இந்த படத்திற்கான இசையமைப்பு பணியை ஷாகன் ரகுமான் மேற்கொண்டிருந்தார். இந்த படத்தின் டீசரில் பிரியங்கா வாரியார் கதாநாயகனை ஒரு மீட்டிங்கில் வைத்து காதல் வலையால் கண்ணசைத்து சுடுவது போல் இருந்த காட்சிகள் வெளியிடப்பட்டது. 

இந்த காட்சிகளானது மலையாள திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு திரையுலகில் பெரும் வரவேற்பு பெற்று., படத்தை எதிர்பார்த்து பல்வேறு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த டீசருக்கு கிடைத்த வரவேற்பை கவனித்த படக்குழு மலையாள மொழி மட்டுமின்றி தமிழ்., தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டது. 

அதன் படி., கடந்த மாதத்தில் நடைபெற்ற காதலர் தினத்தன்று படம் வெளியாகிய நிலையில்., இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த நிலையில்., தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஒமர் படம் குறித்து பேசினார். இந்த படத்தின் துவக்கத்தில் கதையை பற்றி அறியாமல் இருந்த இருவரும் இருந்த நிலையில்., எனக்கு தேவையானது அவர்கள் கதை குறித்து அறியாமல் இருந்தது 

இவர்களுக்குள் திடீரென ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தின் கதையம்சத்தை மாற்ற கூறினார்., கதையை மாற்றினால் நன்றாக அமையாது என்று கூறியும் கேட்கவில்லை. இதனால் கதையம்சத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக படம் தோல்வியை தழுவியது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oru Adar love movie flap director speech about flap


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->