செய்தியை ஆராயாமல் வதந்தியை பரப்பாதீர்கள்.! சுதாகரின் அதிரடியால்., அதிர்ச்சியான ரஜினி ரசிகர்கள்.!!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடத்தில் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து நமக்கு களப்பணியாற்ற காவலர்கள் வேண்டும் என்றும்., அரசியலுக்கு வருகிறேன்., நமது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்றும்., தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தை திறந்து உறுப்பினர்களை இணைக்க கூறி ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். 

இதனை ஏற்று கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்து களப்பணியில் தீவிரமாக இறங்கிய ரசிகர்கள் பொதுமக்களுக்கு சேவைகளை செய்ய துவங்கினார். இந்த நேரத்தில் தற்போது ரஜினி பேட்ட திரைப்படத்தில் நடித்து முடித்து., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சூழ்நிலையில்., தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்ற கட்டமைப்புகள் அனைத்தும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த சமயத்தில்., அடுத்த சட்டமன்ற தேர்தலானது 2021 ம் வருடத்தில் நடக்கவிருக்கும் நிலையில்., மாவட்டம் தோறும் உள்ள அரசியல் கட்டமைப்பை விரைவாக முடிக்குமாறும்., வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகுவோம் என்றும்., தற்போது வரை சுமார் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்ற தகவலானது வெளியாகியிருந்தது. 


இந்த தகவலை கவனித்த ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் "ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு வாய் மொழி உத்தரவு என்று ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

now fake rajinikanth news trending on social media twit vm sudakar about issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->