வாவ் என்னவொரு அழகு.. முதன்முதலாக தனது செல்லமகளின் புகைப்படத்தை வெளியிட்ட நீலிமா ராணி!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.அதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் நீலிமா மொழி ராஜாதிராஜா,சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். 

அதுமட்டுமின்றி நடிகை நீலிமா ராணி பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயின், வில்லி என பல வித்தியாசமான அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கென ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.

 நடிகை நீலிமா ராணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் நீலிமாராணி சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறி தனது தாய் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

English Summary

neelima rani post her daughter photo


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal