சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீடியோ! வசைபாடும் நெட்டிசன்கள்!!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று அவர்களது சார்பில் நிதி அளித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவரது வீட்டில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால் எவ்வித படப்பிடிப்புகளும் நடக்காமல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை நயன்தாரா அவரது காதலருடன் டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தும் இவர்கள் இப்படி நடந்து கொள்வது சரியா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara tiktok video viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->