நயன்தாராவை பங்கப்படுத்திய நபர்.. பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில்  பிகில், தர்பார் படங்கள் வெளியானது. 

தொடர்ந்த மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு நயன்தாரா விரதமிருந்து நடித்து வருகிறார். சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் உள்ளார்.

இந்நிலையில், இந்த போஸ்டரை பார்த்துவிட்டு, யாரு அம்மன் வேஷம் போட்றதுன்னு ஒரு அருகதை இல்லாம போச்சு என ஒருவர் நயன்தாராவை கிண்டல் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, Durgai raj... உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களூக்கு நல்ல புத்திய கொடுக்கனும்.. என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nayanthara photo fan comment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->