சின்னத்திரையில் களமிறங்கும் நயன்தாரா.! பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது நடிகர்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. 

இவர் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ஹீரோயின்களுக்கே ரோல்மாடலாக இருக்கக்கூடியவர். 

மாபெரும் உச்சத்தை அடைந்த நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் அத்தகைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெறுகிறது. மேலும் நயன்தாரா தற்போது விஜய்63 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால் அது என்ன நிகழ்ச்சி என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் ஆர்வத்துடன் எட்டிப்பார்த்து காத்திருக்கின்றனர்.


 

English Summary

nayanthara on the show in colours tamil


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal