விஸ்வாசம் 2 படத்தில் நயன்தாராவா?! இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தின் அதிரடி!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிவா தற்பொழுது விசுவாசம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கி முடித்து, அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இந்நிலையில், இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 39வது படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக  டி.இமான் பங்கேற்கிறார். மேலும், இந்த படத்தில் 'விஸ்வாசம்' படத்தின் தொழில்நுட்ப குழுவினர் பணிபுரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தை போல சூர்யாவின் 39வது படமும் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

சிவாவின் இயக்கத்தில் இயற்றப்பெற்றால், செண்டிமெண்ட் கதையுடன் எடுக்கப்படும் இந்த படத்தில் நயன்தாரா நடிகையாக இருக்கும் பட்சத்தில் இது விசுவாசம் பார்ட் 2 போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

English Summary

nayanthara in surya 39


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal