மும்பை திரைப்பட அருங்காட்சியகத்தில் ரஜினியின் புகைப்படம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய மற்றும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்., உலகளவில் தனக்கென தனி ரசிகர் படையை வைத்து கொண்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை., ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.

கடந்த 2 வருடங்களாகவே ரசிகர்களுக்காக அடுத்தடுத்த திரைப்படங்களை அதிரடியாக வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படமானது மாபெரும் வசூல் சாதனையை பிடித்தது.

இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனையையும்., ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இந்தியா திரைப்பட துறையின் அருங்காட்சியகமானது நேற்று பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

மும்பையில் உள்ள இந்திய சினிமா அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1

மும்பையில் உள்ள இந்திய சினிமா அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் 2

அந்த புகைப்படங்களில்., இந்திய திரையுலகில் உள்ள பல நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை இடம் பெற்றன., அந்த பட்டியலில் திரையுலகின் உச்சநட்சத்திரம்., ரசிகர்களால் அன்போடு சூப்பர்ஸ்டார் என்றும்., தலைவர் என்றும் அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai cinema museum rajini picture., fans celebration now going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->