இன்று கோலாகலமாக நடைபெற்ற பிரபல தமிழ்நடிகரின் மகன் திருமணம்! வாழ்த்து கூறிய திரை பிரபலங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பல முகங்களை கொண்டு விளங்குபவர் மனோ பாலா.இவர் தனது உடலமைப்பாலும் பேச்சாலும் தனக்கே உரிய பாணியில் காமெடியில் கலக்கி வருபவர்.

மேலும் அவர் இதுவரை 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.அதுமட்டுமின்றி 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.மேலும் பல முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் மனோபாலாவின் மகன் ஹரிஷுக்கும், பிரியா என்பவருக்கும் இன்று காலை 7 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  

மேலும் இவர்களுடைய திருமண வரவேற்பு விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  திரை பிரபலங்கள்  சத்யராஜ், நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன் நடிகை கீர்த்தி சுரேஷ், கவுண்டமணி, விவேக், உதயநிதி,சதீஷ், சரண்யா பொன்வண்ணன்,இயக்குனர் சங்கர்,  பாக்யராஜ் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ரோபோ ஷங்கர்,   போன்ற பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டு திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினர்.


 

English Summary

monobala son got marriage today


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal