விஷால் மீது கமிஷனர் அலுவலகத்தில் முறைகேடு புகார்! - Seithipunal
Seithipunal


தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் சுமார் 7 கோடி முறைகேடு சீய்த்து எடுக்கப்பட்டதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு  சென்னை தி.நகரிலுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்டது. மேலும் அதனை விஷால் உடைக்க முற்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்  இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்நிலையில் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி பிப்ரவரி 2 மற்றும்3  நடைபெற ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்நிலையில்  இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன்,எஸ்.வி. சேகர், கதிரேசன் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இன்று மதியம் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து  கே.ராஜன் கூறுகையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். ஆனால் அவர் கணக்கு விவரம் குறித்து எங்களுக்கு அனுப்பிய நோட்டீசில் சங்க நிதியிலிருந்து  எட்டே முக்கால் கோடியை தான் நிர்வாகிகளுக்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை விஷால் பயன்படுத்தியதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடப்பதால், இளையராஜா இசை நிகழ்ச்சியை விஷால் நடத்தக்கூடாது என்றும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money farud complaint given in commisionar office on vishal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->