பட்டினத்தார் வரிகளுடன் என்னுடைய வரிகள்... கண்ணாமூச்சிஆட்டம் பாடல் காட்சிகள் வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. முதல் நாளே ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடககாதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு பல பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இப்படம் வெளிவந்து தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. மேலும், இப்படம் நாடகக்காதல் கும்பல்களை வெட்டவெளிச்சமாக்கும் என்று மோகன் ஜி தெரிவித்திருந்தார்.

தற்போது இப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து, தமிழ் திரையுலகையே திருப்பி பார்க்க வைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்களில், முதல் பாடல் வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் " கண்ணாமூச்சி ஆட்டம் " பாடல் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mogan g release Draupathi kannamoochi attam video song


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->