கொண்டாட்டங்களுடன் காதலியை கரம்பிடித்த பிரபல தொகுப்பாளர்! விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து கூறிய திரை பிரபலங்கள்.! - Seithipunal
Seithipunal


ஆர்ஜேவாக கிஅறிமுகமாகி பிரபலமானவர் மிர்ச்சி விஜய். இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் ஆவார்.

இவர் கடந்த  இரு ஆண்டுகளாக மிர்ச்சி மோனிகா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பெற்றோர்களின் ஆசியோடு  பிப்ரவரி 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

 இந்த திருமண விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, சிவா, தொகுப்பாளினி ப்ரியங்கா, சினேகா, ரியோ, பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட் ராமன் மற்றும் அவருடைய மனைவி நிஷா  ஆகியோர் கலந்துகொண்டு திருமண தம்பதியினருக்கு வாழ்த்து கூறினர்.

மேலும் அந்த விழாவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் குழுவினரும் கலந்து கொண்டு விழாவை கோலாகலமாக்கினர்

இந்நிலையில் தற்போது மிர்ச்சி விஜயின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

English Summary

mirchi vijay gor marriage with his lover


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal