பிரபல மிமிக்ரி கலைஞரும் நடிகருமான மனோ காலமானார்..! - Seithipunal
Seithipunal


பிரபல பலகுரல் கலைஞரும் மற்றும் நடிகருமான மனோ நேற்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று நடிகர் மோனோவும் அவரது மனைவியும் சென்னை ஆவடி அருகே காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று, எதிர்பாராதவிதமாக கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே நடிகர் மனோ உயிரிழந்தார். அவரது மனைவி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் 7 வயது மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த மரணம் அவரது உறவினர்கள் மற்றும் திரைதுறை நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அவரது உறவினரான ஜான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில் பலகுரல் கலைஞரும் நடிகருமான மனோ ஆவடி அருகே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் அவரது மனைவி ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்று அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mimicry artist mono death in car accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->