"கொஞ்சம் கூட எனர்ஜி குறையல." சக்கு சக்கு வத்திகுச்சி பாடலுக்கு நடனமாடிய மன்சூர் அலிகான்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது.

விக்ரம் திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விக்ரம் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.இதுவரை 22 ஆம் நாளில் படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் , தற்போது இந்த படத்தின் மூலம் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் மீண்டும் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வரும் நிலையில் அந்த பாடலுக்கு மன்சூரலிகான் அதே எனர்ஜியுடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: புதியதலைமுறை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mansoor alikan video song viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->