பிரபல தமிழ் நடிகையின் மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


மனோரமா நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் இருந்தார். மனோரமா 2015 ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில், மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manorama son admitted to hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->